விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து... காத்திருக்க தேவையில்லை!இலக்கு வைத்து வழங்க மின்வாரியம் தீவிரம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து... காத்திருக்க தேவையில்லை!இலக்கு வைத்து வழங்க மின்வாரியம் தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:23

உடுமலை;உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், சாதாரண வரிசை உட்பட விண்ணப்பங்களுக்கு, அரசு வழிகாட்டுதலின்படி, விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழக அரசு, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட, உடுமலை, அங்கலக்குறிச்சி, பொள்ளாச்சி கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில், விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.



உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், சாதாரண வரிசை இலவச மின் இணைப்பு, 2003 ஏப்., 1 முதல், 2005 மார்ச் 31 வரை பதிவு செய்தவர்கள் மற்றும், 2004 மார்ச், 31 வரை, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்தவர்கள் என, 555 பேருக்கு தற்போது மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.அதே போல், 2011 மார்ச் 31 வரை பதிவு செய்துள்ள, 25 ஆயிரம் ரூபாய் செலுத்திய, 1,592 விவசாயிகளுக்கும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ள, 1,559 பேருக்கும் மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், தட்கல் முறையில், வரும் விண்ணப்பங்கள் அனைத்திற்கும், மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.இம்முறையில் மின் இணைப்பு பெற, 5 எச்.பி., மின் இணைப்புக்கு, 2.50 லட்சம் ரூபாயும், 5 முதல் 7.5 எச்.பி., திறனுள்ள மின் இணைப்புக்கு, 2,75 லட்சம் ரூபாயும், 7.5 முதல், 10 எச்.பி., வரை, 3 லட்சம் ரூபாயும், 10 முதல் 15 எச்.பி.,க்கு, 4 லட்சம் ரூபாயும் செலுத்த வேண்டும்.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, விவசாய மின் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.தட்கல் முறையில், நேற்று வரை, 522 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டுள்ளன. இம்முறையில் மின் இணைப்பு பெற, தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது; வரும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்க வாய்ப்புள்ளது.


உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, விவசாய மின் இணைப்பு வழங்கும் இலக்கு விரைவில் நிறைவு செய்யப்படும்,'என்றனர்.விவசாயிகள் கவனத்துக்கு!சாதாரண வரிசை இணைப்புக்கு, மின்வாரியம் சார்பில், நோட்டீஸ் வழங்கி, 30 நாட்களுக்குள், ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். இணைப்பு வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு தொகை அனைத்தையும், மின்வாரியம் ஏற்றுக்கொள்ளும்.விவசாயிகள் பணம் செலுத்த தேவையில்லை; 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் பதிவுக்கு, 500 ரூபாய் விண்ணப்ப கட்டணத்தை விவசாயிகள் செலுத்தியுள்ளனர்.மின் இணைப்பு வழங்குவதற்கான செலவினம், 50 ஆயிரத்துக்குள் இருந்தால், மின்வாரியம், எந்த தொகையும் பெறாமல், மின் இணைப்பு வழங்கும்.இணைப்பு வழங்குவதற்கான செலவினம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அரசு வழிகாட்டுதல்படி, தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.அனைத்து மின் இணைப்புகளும், நான்கு மாதத்துக்குள், வழங்கி, அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதே போல், தட்கல் முறையில், மின் இணைப்பு வழங்கும் போது, விவசாயிகள் எவ்வித செலவினமும் மேற்கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் கவனியுங்க!வீடு, வணிகம் மற்றும் விவசாய மின் இணைப்பு பெற, மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆனால், உடுமலை பகுதியிலுள்ள சில மின்வாரிய அதிகாரிகள், விண்ணப்பங்களை தங்களால் நியமிக்கப்பட்ட, புரோக்கர்கள், அலுவலக வளாகத்திலுள்ள சில தனியார் கடைகளில், வாங்கி, சமர்ப்பிக்க வலியுறுத்துகின்றனர்.புரோக்கர்கள் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X