பழமை மாறாமல் பொலிவுறும் தாகூர் மாளிகை! நகராட்சியின் வரலாற்றுக்கு உதாரணம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பழமை மாறாமல் பொலிவுறும் தாகூர் மாளிகை! நகராட்சியின் வரலாற்றுக்கு உதாரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:26

உடுமலை;உடுமலை நகராட்சி அலுவலகமாக இருந்த, பழமையான தாகூர் மாளிகை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம், 1940ல் ஜூலை 7ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1941 ஆக., 27ல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. பழமையான கோட்டையை போன்ற கட்டமைப்பில் கட்டப்பட்டு, 'தாகூர் மாளிகை' என, பெயரிடப்பட்டது.இக்கட்டடம் முன், கட்டடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும், சென்னை மாநில முதலமைச்சராக இருந்த காமராஜரால், 1958 டிச., 29ல் துவக்கப்பட்ட குடிநீர் திட்ட கல்வெட்டு, 1961ம் ஆண்டு, துவக்கப்பட்ட குடிநீர் திட்டம், 1974ல் துவக்கப்பட்ட விரிவாக்க திட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.நகராட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், பழைய அலுவலகம் மூடப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிக்காமல், கட்டடம் பழுதடைந்து காணப்பட்டது.ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தும், கட்டடத்தின் மேற்பகுதியில், மரங்கள் முளைத்து உறுதித்தன்மை கேள்விக்குறியாகி வருவதோடு, கூட்ட அரங்கு, அலுவலக அறைகளும் சிதிலமடைந்தும், பழைய பொருட்களின் குடோனாகவும் மாறியது.அழகுக்கு இருந்த மரம், செடிகள் படர்ந்து, புதர்மண்டியும் காணப்படுகிறது. நகரின் பழமையானதும், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தை, புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், தற்போது பழமையான, இக்கட்டடம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பழைய கட்டடத்தில் இருந்த பழைய சிமென்ட் ஓடுகள் அகற்றப்பட்டு, புதிய மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


பழைய அலுவலகம் முழுவதையும் புதுப்பித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.அதிகாரிகள் கூறுகையில், 'பழமையான கூட்டரங்கு, மேற்கூரை சிமென்ட் கூரை உடைந்து காணப்பட்டது. தற்போது, புதிய மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து, பழைய கட்டடம், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கும்,' என்றனர்.இக்கட்டடத்தின் மீது, பழமையான மணி ஒலிக்கும் சங்கு உள்ளது. மணிக்கு ஒரு முறை ஒலித்த பழமையான சங்கு, தற்போது பராமரிப்பில்லாமல் வீணாகி வருகிறது. இதனையும் புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X