பட்டாவுக்கு வீட்டுமனை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பட்டாவுக்கு வீட்டுமனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:27

மாவட்ட நிர்வாகம் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவுக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென, கொமரலிங்கம் மக்கள், வாக்குவாதம் செய்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், இலவச வீட்டுமனை பட்டா வாங்கியவர்கள், அதற்கான இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட, மடத்துக்குளம் தாலுகா மக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தனர்.மடத்துக்குளம் தாலுகா, கொமரலிங்கம் கிராமத்தில், 90 பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.



கடந்த, 2017ல் பட்டா வழங்கிய பிறகு, அந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதனால், இதுநாள் வரை, மனையிடம் பட்டாதாரருக்கு ஒதுக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட மக்கள், அரசு வழங்கிய பட்டாவுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இலவச பட்டா வழங்கிய பிறகு, இதுநாள் வரை இடம் கிடைக்கவில்லை என, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'பட்டா வழங்கிய இடத்தில், தனியார் மூன்று பேர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து அகற்றி, பட்டாதாரருக்கு வீட்டுமனை பிரித்து கொடுக்கப்படும்,' என்றனர். - நமது நிருபர் -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X