ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு: 'மாஜி' கமிஷனர்கள் சிக்குவார்களா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:59

கோவை:கோவை மாநகராட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த முன்னாள் கமிஷனர்களிடம் விசாரிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக கொடுத்த புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மூன்று அதிகாரிகள், மதுரை, வேலுார், ஈரோடு மாநகராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர்.எந்தவொரு பணியாக இருந்தாலும், டெண்டர் இறுதி செய்ய, மாமன்ற கூட்டத்தில் விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றி ஒப்பதல் வழங்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், கமிஷனர்களாக இருந்தவர்கள் தலைமையில், 72 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 2,886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.ஒரே நிறுவனத்துக்கு, அதிகமான தொகைக்கு ஏகப்பட்ட பணிகள் ஒதுக்கியது; ஒரே பணியை தனித்தனியாக பிரித்துக் கொடுத்தது; குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே, பல டெண்டர்களில் பங்கேற்றது; சில நிறுவனங்களுக்கு முன்னரே பணி ஒதுக்கி விட்டு, தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது நிறுத்தப்பட்டது. தி.மு.க., தரப்பில் பலமுறை வலியுறுத்தியும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும், மாமன்ற தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.


அவற்றில் இருந்து, டெண்டர் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.வழக்கமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மாநகராட்சி தனி அலுவலர் பொறுப்பு, அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், அந்தந்த மாநகராட்சி கமிஷனர்களுக்கே வழங்கப்பட்டது.அப்போது, கமிஷனர்களாக இருந்தவர்களில், விஜயகார்த்திகேயன், 39 கூட்டங்கள் நடத்தி, 1,404 தீர்மானங்கள், ஷ்ரவன்குமார், 22 கூட்டங்கள் நடத்தி, 922 தீர்மானங்கள், குமாரவேல் பாண்டியன், 11 கூட்டங்கள் நடத்தி, 560 தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றனர்.


கமிஷனர்கள் ஒப்புதலின்றி, டெண்டர்களை இறுதி செய்து, தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அதனால், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, கமிஷனர்களாக இருந்தவர்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தற்போது, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய செயலராக விஜயகார்த்திகேயன், வேளாண்மை கூடுதல் இயக்குனராக ஷ்ரவன்குமார், வேலுார் கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X