சென்னையில் விதி மீறல்கள் அதிகரிப்பு: அரசியல் கட்சிகள் அராஜகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 செப்
2021
09:41
பதிவு செய்த நாள்
செப் 28,2021 08:59

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பெயர் பலகைகள் மற்றும் சுவர்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படம் மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. கட்சிக்காரர்களின் விதிமீறிய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், சுவர்கள், சுரங்க பாலங்கள் உள்ளிட்டவற்றில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கலைகள் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில், சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.



அதேசமயத்தில், பல்வேறு இடங்களில் சுவர்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. இதில், கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் அவர்களை வாழ்த்தி, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதே போல், புறநகர் பகுதிகளில், தெரு பெயர் பலகை மற்றும் ஊராட்சி வரவேற்பு பலகைகளில், அரசியல் கட்சியினரை வாழ்த்தி, கட்சியினர், தனியார் சார்பில் விளம்பர அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.



தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சிகளில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தனியார் மற்றும் பொது இடங்களில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது. அதே போல், சென்னை சேத்துப்பட்டு - செனாய் நகர் நோக்கி செல்லும், ஹாரிங்டன் சாலையில் பச்சையப்பன் கல்லுாரி மதில் சுவர் உள்ளது. இந்த சுவர் முழுதும், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதை அகற்றி, விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:43:37 IST Report Abuse
DVRR ரொம்ப ரொம்ப சிம்பிள் யார் பெயர் இருக்கின்றதோ அவர்கள் எந்த கட்சியோ அவர்களுக்கு ரூ 1 கோடி பெனால்டி போடுங்கள் அப்புறம் பாருங்கள் என்ன ஆகின்றதென்று???ஒரு கட்சிக்காரன் இன்னொரு கட்சிக்காரன் பெயரை போட்டாலும் அந்த எதிர்க்கட்சி மீது வெறுப்பால் உடனே வந்து இரவோடு இரவாக அதை அழித்து விடுவார்கள், அந்த அளவுக்கு அவர்கள் சுறு சுறுப்பாக மாறுவார்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
28-செப்-202114:07:29 IST Report Abuse
jayvee இவனுங்க மேல கேஸ் போடமுடியாது .. ஏனென்றால் ஆளுங்கக்கட்சி, அவனுக மேல கேஸ் போட்ட, திருப்பி PCR கேஸ் போடுவாங்க.. NTK மேல போட்ட, பிரபாகரன் திரும்பு வந்து சுட்டுடுவாரு .. கம்ம்யூனிஸ்ட் மேல கேஸ் போட்டா சீன அரசு கோவிச்சிக்கும், காங்கிரஸ் மேல கேஸ் போட்ட சோனியா உதைக்கும் .. அதிமுக மேல கேஸ் போட்டால் பழிவாங்கும் நடவடிக்கை .. BJP மீது போட்டால் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி, அல்லுலேஹ் கும்பல் மீது கேஸ் போட்டால் வோட்டு கிடைக்காது. பச்சை மீது கேஸ் போட்ட குண்டு வெடிக்கும்.. என்னப்பா இது . .
Rate this:
Cancel
28-செப்-202112:04:01 IST Report Abuse
அப்புசாமி விளம்பரங்களில் யார் பேர் எழுதப்பட்டிருக்கிறதோ அவிங்களுக்கு மூணு மாத சிறையும், 30 லட்சம் ரூவா அபராதமும் போடணும். அப்பக்.கூட திருந்தாத ஜென்மங்களா இருப்பாங்க.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202113:18:07 IST Report Abuse
Ramesh Sargamரொம்ப சரியா சொன்னீர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X