பாசன வாய்க்காலின் மோசமான நிலை: பல்லடம் விவசாயிகள் கவலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பாசன வாய்க்காலின் மோசமான நிலை: பல்லடம் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
23:50

பல்லடம்:பல்லடம் அருகே, பி.ஏ.பி., பாசன வாய்க்காலின் மோசமான நிலை குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பல்லடம் அருகே ஊராட்சி, அல்லாளபுரம், அவரப்பாளையம், நொச்சிபாளையம் கடைமடை வரை செல்லும் பி.ஏ.பி., கிளை வாய்க்கால் கடந்த மாதம் துார்வாரப்பட்டது.சமீபத்தில், தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுகள் நிறைந்து, தண்ணீர் ஓட்டம் தடைபட்டுள்ளது.


அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஆறு ஆண்டாக கேட்பாரற்று கிடந்த பி.ஏ.பி., வாய்க்கால் விவசாயிகள் பங்களிப்புடன் கடந்த மாதம் துார்வாரப்பட்டது. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், பாசன நீருடன் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள், கலந்து கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறி உள்ளது.கழிவுகளால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஓட்டம் தடைபட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, குப்பை கிடங்காக இருந்த கிளை வாய்க்கால் தூர்வாரப்பட்டது.இனியாவது பாசன நீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், மீண்டும் சாக்கடை கால்வாயாக மாறி வருவது கவலை அளிக்கிறது. வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X