போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
00:03

திருப்பூர்:திருப்பூர் நஞ்சப்பா பள்ளி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.திருப்பூர், நஞ்சப்பா பள்ளி ரோட்டில் செகண்ட்ஸ் பனியன் வியாபார கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைந்துள்ளது.மாலை நேரம் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ரோட்டோரங்களில் தற்காலிக துணி கடைகள் அமைத்து வியாபாரம் நடக்கிறது.


குறிப்பாக, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான ரோடாக நஞ்சப்பா பள்ளி ரோடு இருந்து வருகிறது.இதனால், ரோட்டோரம் போடக்கூடிய கடைகளுக்கு வரக்கூடிய மக்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக ரோட்டில் நிறுத்தி செல்வதால், பொதுமக்கள் நடமாட சிரமப்படுவதோடு, வாகனங்களும் செல்ல முடிவதில்லை.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் ஒழுங்குப்படுத்துவதோடு, விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X