வாலிபர் கொலை :'பார்' ஊழியர்கள் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வாலிபர் கொலை :'பார்' ஊழியர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
00:05

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் மதுக்கடை 'பாரில்' பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.தேனி மாவட்டம், சின்னமனுாரை சேர்ந்தவர் பாபு ராஜா, 37. பெருமாநல்லுார் அருகே வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க வந்த அவர், நேற்று முன்தினம், அப்பகுதியிலுள்ள மதுக்கடை 'பாருக்கு' சென்றார். '10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு' தகராறில் ஈடுபட்டுள்ளார்.அங்கிருந்தவர்கள், அவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இது குறித்து, பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'பார்' ஊழியர்களான சிவகங்கை - காளையார்கோவிலை சேர்ந்த கண்ணப்பன், 45, உதயசந்துரு, 18, இளையான்குடி - தாயமங்கலத்தை சேர்ந்த முனியசாமி, 29, சூரணத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 49, ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X