கடைக்காரருக்கு கத்திக்குத்து: மர்ம நபர் தப்பியோட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கடைக்காரருக்கு கத்திக்குத்து: மர்ம நபர் தப்பியோட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
00:08

திருப்பூர்:குன்னத்துாரில் வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளவர், சுப்ரமணியன், 60. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார்.அப்போது, அவரை மறைந்திருந்த ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். அவரின் அலறல் கேட்டு, மனைவி வந்த போது, அவரை வீட்டுக்குள் தள்ளிய மர்ம நபர் கதவை வெளியே தாழிட்டார். மர்ம நபரைப் பிடிக்க முயன்றசுப்ரமணியத்துக்கு மீண்டும் கத்திக் குத்து விழுந்தது.அருகில் வசிப்போர் திரண்ட போது, மர்ம நபர் தப்பினார். சுப்ரமணியன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். குன்னத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X