கேபிள் பதிப்பு பணியால் குடிநீர் குழாய் சேதம் | சென்னை செய்திகள் | Dinamalar
கேபிள் பதிப்பு பணியால் குடிநீர் குழாய் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
03:44

செங்குன்றம் : தனியார் நிறுவன இணையதள கேபிள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால், குடிநீர் குழாய் சேதமடைந்தது.



சென்னை செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், காய்கறி மார்க்கெட் முதல் பனையாத்தம்மன் கோவில் வரை, மூன்று இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை, தனியார் நிறுவனத்தினர் 'இன்டர்நெட் கேபிள்' பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி காரணமாக, பனையாத்தம்மன் கோவில் தெரு சந்திப்பில் குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைந்தது. மேலும், காலை நேரத்தில் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைத்தனர். குழாய் உடைப்பால், பனையாத்தம்மன் கோவில் தெரு மற்றும் காய்கறி மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளுக்கான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகத்தினர், குழாய் உடைப்பை கண்டறிந்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணி, மாலை வரை நீடித்தது. தனியார் நிறுவனத்தினர், உரிய அனுமதி பெற்றாலும், கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனங்கள், உள்ளாட்சி அலுவலக அதிகாரிகளிடம்



இதுகுறித்து தெரிவிப்பதில்லை. இரவில் அவசரம் அவசரமாக, 5 அடி ஆழத்திற்கு பள்ளம் வெட்டி, கேபிள் பதிக்கும் பணிகளை செய்து விடுகின்றனர்.ஆனால், அத்தியாவசிய தேவையான குடிநீர், மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தான் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், சீரமைப்பு பணிகளால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன.சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவோர், மின்சார விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். அதனால், கேபிள் பதிக்கும் நிறுவனங்கள், உள்ளாட்சி, மின்சாரம், தொலைபேசி துறையினரின் ஆலோசனையுடன் பணிகளை செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X