முடங்கிய சுகாதார பணிகள் மாநகராட்சியினர் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2021
03:45

புழல் : போதிய பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், சுகாதார பணிகளை செய்ய முடியவில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்கள் அதிருப்தியில்உள்ளனர்.



சென்னை மாநகராட்சி 22வது வார்டு புழல், சக்தி வேல் நகரில் மழை நீர் வடிந்து செல்லவும், கழிவு நீர் செல்லவும் கால்வாய் வசதியில்லை. இதனால் அங்குள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்குகிறது. இதனால் ஏற்படும் கொசுத் தொல்லை, துர்நாற்றத்தால் அங்கு வசிப்போர், சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள், இது குறித்து மாநகராட்சியின் 22வது வார்டு அதிகாரியிடம் புகார் செய்தால், 'எங்களிடம் போதிய பணியாளும், சுகாதார பணியை செய்வதற்கான உபகரணங்களும் இல்லை.மேலும், சென்னையை அழகாக்க மரம் நடுவது, சுவர் ஓவியங்கள் வரைவதற்கே நேரம் போதவில்லை. அதனால், நீங்களே 'பிளீச்சிங்' பவுடர் வாங்கி கழிவு நீர் தேங்கும் இடங்களில் தெளித்து விடுங்கள்' எனக் கூறி நழுவி விடுவதாக, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்



.இதுகுறித்து, சக்திவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:மாநகராட்சிக்கு அனைத்து வரியையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களின் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். குறிப்பாக, சுகாதார சீர்கேடு மலிந்துள்ளது. நாய், பூனை, காகம் என, எது இறந்து கிடந்தாலும், அவற்றை அகற்றுவதில்லை. ஆங்காங்கே மர்ம காய்ச்சல், 'டெங்கு' பரவும் நிலையில், எங்கள் பகுதி குடியிருப்புகளின் நிலை மோசமாக உள்ளது. தெருக்களில் தேங்கிய கழிவு நீரை அகற்றி, கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X