பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு | சென்னை செய்திகள் | Dinamalar
பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
04:38

சென்னை : தாம்பரம் பள்ளி மாணவர்களுக்கு, போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தாம்பரம் போலீசார் சார்பில், மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.



'அடாப்ட் ஹோம்' எனும் போதை மீட்பு மற்றும் மனநல மறுவாழ்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் சார்லஸ் பங்கேற்றனர்.இதில், கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதன் வாயிலாக நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.'அடாப்ட் ஹோம்' மையம் சார்பில், பங்கேற்ற டாக்டர்கள் குழுவினர், மாணவர்களுக்கு மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்வது குறித்து, சிறிய உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.மேலும், 'ஆன்லைன்' விளையாட்டுகளால், உடல் மற்றும் மனதளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவது, பெற்றோருக்கு தெரியாமல் பின்பற்றும் தீய பழக்க வழக்கங்களால், அவர்களின் கற்றல் திறனில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் அறிவுரை வழங்கினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X