செய்திகள் சில வரிகளில்... ரத்தசோகை கண்டறியும் முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2021
04:56

உடுமலை ரோட்டரி இ கிளப், ரோட்டரி தேஜஸ் மற்றும் பிரியா மருத்துவமனை சார்பில் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, ரத்தசோகை கண்டறியும் சிறப்பு முகாமுக்கு, உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார். இதையடுத்து, மாணவியரின் எடை, உயரம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு ஆகியவை சோதனை வாயிலாக கண்டறியப்பட்டது.பின், பாதிப்பு உடைய மாணவியருக்கு தேவையான மாத்திரை வழங்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. சுத்தம், சுகாதாரம், தரமான உணவுகள் வாயிலாக கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திலகாம்பாள், நிர்வாகிகள் சத்யம்பாபு, இணையத்துல்லா, சுல்தான், ஆய்வக டெக்னீசியன் தவசுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு விழிப்புணர்வுகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், வட்டார பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், சமுதாய விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பெண் கல்வி, கல்வி கற்பதன் முக்கியத்துவம், கற்போம் எழுதுவோம், வயது வந்தோர் கல்வி திட்டத்தின் குறிக்கோள் ஆகியன குறித்து, ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களான, ஆனந்தன், பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


கிராம குளங்களுக்கு மறுவாழ்வுபொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், கடந்த, 2006 - 2010 ஆண்டுகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களின் நீராதாரங்களை மேம்படுத்தும் நோக்கில், ஊராட்சிக்கு தலா ஒரு பொதுக்குளம் அமைக்கப்பட்டது. அதன்பின், 10 ஆண்டுகள் அ.தி.மு.க., அரசு பதவி வகித்ததால், அந்த குளங்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன. பல ஊராட்சிகளில், பொதுக்குளங்கள் கழிவுநீர் குட்டையாகவும், குப்பைக்கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 65 பொதுக்குளங்களை உடனடியாக துார்வாரி சுத்தப்படுத்தவும், குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டு, பசுமையை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இப்பணியின் திட்டச் செலவுக்காக, குளத்துக்கு தலா, 1.62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கிராம நீர்நிலைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் பருவமழை நன்கு பெய்து, பெரும்பாலான குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீருள்ள குளங்களை துார் வாருவது எப்படி என ஒன்றிய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.கண் சிகிச்சை இலவச முகாம்வால்பாறை அடுத்துள்ள, சக்தி - தலநார் டீ மற்றும் காபி எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசதிக்காக, கோவை ரோட்டரி கிளப் டெக்சிட்டி மற்றும் 'கோவை ஐ பவுண்டேஷன்' சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமை, கோவை காபி போர்டு இயக்குனர் கருத்தமணி துவக்கி வைத்தார். இதில், மொத்தம், 160 பேர் கலந்து கொண்டனர். 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.முன்னதாக, நலிவுற்ற பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு படிப்பது குறித்து பேராசிரியர்கள் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை எஸ்டேட் தலைவர் ரவிசந்திரன், ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ்பொன்னுசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.நிழற்கூரை அமைக்க கோரிக்கை


பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், அம்பராம்பாளையம் சுங்கம், தாத்துார் பிரிவு, வளந்தாயமரம் உள்ளிட்ட பகுதிகளில், நிழற்கூரைகள் இருந்தன. இந்நிலையில், மீன்கரை ரோடு விரிவாக்கம் செய்வதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்த மூன்று பகுதிகளில் இருந்து நிழற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டன.ஆனால், இன்று வரையில் புதியதாக நிழற்கூரை கட்டப்படாமல் உள்ளதால், மக்கள் மழை மற்றும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.பஸ்சுக்காக காத்திருக்க, இடித்து அகற்றப்பட்ட இடங்களில், நிழற்கூரைகள் கட்ட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஓசோன் தின நிகழ்ச்சிமடத்துக்குளம தாலுகா காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, உலக ஓசோன் தின நிகழ்ச்சியில், ஓசோன் பற்றியும், ஓசோன் வாயு மண்டலத்தை காப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதிப்பதால், ஓசோன் மண்டலத்தில் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்பதையும், இதனால் எதிர்கால சந்ததி பாதிக்கப்படும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.இந்த பாதிப்புகளை குறைக்க, அனைவரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து ஓசோனை கருப்பொருளாக கொண்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கல்லுாரியில் கருத்தரங்கம்


உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில் வித்யாசாகர் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், 'தொழில் கூட்டமைப்பிற்கான ஆளுமை பண்புகள்' என்ற தலைப்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு நடந்த ஆன்லைன் கருத்தரங்கில் கல்லுாரிச்செயலர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கோவை தனியார் நிறுவன மனிதவள பொது மேலாளர் செல்வராஜ், பங்கேற்றார். பின், மாணவர்கள் இடையே தொழில் கூட்டமைப்பு குறித்து விளக்கினார். கல்லுாரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிவால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை 'ஆன்லைன்' வாயிலாக கண்டறிய, ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, ஐந்தாம் கட்ட பயிற்சியை துவக்கி வைத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பேசும் போது, 'அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அனைத்து விபரங்களையும், கணினியில் பதிவு செய்யப்படும்.அதன்பின், மாணவனின் கல்வித்திறன், செயல்பாடு, மதிப்பெண்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் விபரம் குறித்து, கணினியில் பதிவு செய்யப்பகிறது. இதனால், பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயர வாய்ப்புள்ளது,' என்றார்.


தார் ரோடு அமைக்க எதிர்பார்ப்பு


உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபகாலமாக, குடியிருப்பு வீடுகள் அதிகரித்து வரும் நிலையில், தார் ரோடு வசதி இல்லை. வழித்தடங்கள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்பகுதி மக்கள், அவசரத் தேவைக்கு வாகனங்களில் விரைந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ரோடு அமைக்கக் கோரினால், நிதி ஒதுக்கீடு இல்லையென, அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். மக்கள் நலன் கருதி, தார் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும். கற்கள் நிறைந்து காணப்படும் வழித்தடத்தில், பெண்கள், குழந்தைகள் அதிகளவில் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. ஒன்றிய அதிகாரிகள் வழித்தடத்தை ஆய்வு செய்து, தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X