திண்டுக்கல் : வங்கி சேவை போன்று தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படுகிறது. இந்த தபால் ஏ.டி.எம்., சேவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு அக்.1 முதல் கட்டண முறை அமலுக்கு வருகிறது.
இதன் படி ஏ.டி.எம்., கார்டை மாற்றுவதற்கு ரூ.300, கடவுச்சொல்லை (பின் நம்பர்) மாற்றுவதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., டெபிட் கார்டு ஆண்டு பராமரிப்பு கட்ட ணமாக ரூ.125, எஸ்.எம்.எஸ்., சேவைக்கான ஆண்டு கட்டணம் ரூ.12 வசூலிக்கப்படும். தபால் துறை ஏ.டி.எம்.,களில் 5 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் ரூ.10, நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 5 முறைக்கு மேல் ரூ.5 வசூலிக்கப்படும்.
இதேபோல், மற்ற ஏ.டி.எம்.,களில் 3 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மற்றும் ஊரக பகுதிகளில் 5 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் ரூ.20, நிர்ணயிக்கப்பட்டதை விட மற்ற ஏ.டி.எம்.,களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் ரூ.8 வசூலிக்கப்படும். மேற்கண்ட சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி உண்டு என, தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.