திண்டுக்கல் : சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பசுமை நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டை பெறுவது எப்படி, கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரேவதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிகுமார் துவக்கி வைத்தார். மையத் தலைவர் சுப்ரமணியம், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், மைய பொருளாளர் ராஜேஸ்கண்ணன் பேசினர்.