சமுதாய விழிப்புணர்வு நாடகம்: அரசு பள்ளியில் அரங்கேற்றம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சமுதாய விழிப்புணர்வு நாடகம்: அரசு பள்ளியில் அரங்கேற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
07:24

உடுமலை:அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், 'கற்போம்; எழுதுவோம் இயக்கம்' என்ற வயது வந்தோர் கல்வித்திட்டத்தை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் செயல்படுத்துகிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'கற்போம் கல்வியறிவு மையங்கள்' செயல்படுத்தி, கற்பிக்கும் பணியும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில், 18 பள்ளிகளில், சமுதாய விழிப்புணர்வு பிரசார கலைப்பயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, உடுமலை குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார்.நாடகக்கலைஞர்கள் பங்கேற்று, கல்வியின் மகத்துவம் குறித்து மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, அவசர கால உதவிக்கு, 1098 எண்ணை தொடர்பு கொள்ளவும், குழந்தை திருமணம் தடுப்பு, தொடுதலின் புரிதல் குறித்த விழிப்புணர்வுகள், நாடகம், கதை, பாடல் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.இதனை, மாணவியர் அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X