அனுமதியில்லாத கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கெடு! கமிஷனர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2021
00:46

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்தில் அகற்ற கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பைபாஸ் ரோடு வாரச்சந்தையை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத, மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்திற்கு மாற்றுவது குறித்து கமிஷனர் இன்று (அக்.,8) நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.


மதுரையில் பார்க்கும் இடங்களில் எல்லாம் கடைகளை விரித்து ஆக்கிரமிப்பு செய்வது தொடர்கிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ்நகர், அரசு மருத்துவமனை பகுதி, அண்ணாநகர் உட்பட பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியதன் எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.



கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: மாநகராட்சிக்குசொந்தமான பராமரிப்பு பகுதிகளில் அனுமதியின்றி, ஆக்கிரமித்த, காலாவதியாகியும் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள், நிரந்தர, தற்காலிக கட்டுமானங்களை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்டப்பவர்கள் அகற்ற வேண்டும்.

குறிப்பாக சின்னக்கடை தெரு, அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி வரை மற்றும் கீழமாரட் வீதி, அரசு மருத்துவமனை முன்புறம், சுகுணா ஸ்டோர் ரோடு ஆகிய இடங்களில் உள்ளஆக்கிரமிப்புக்களால் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே தற்காலிக கட்டுமானங்கள், பெட்டி கடைகள்,இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள் அகற்றாவிடில் மாநகராட்சி மூலம்அகற்றிஅபராதம் வசூலிக்கப்படும் என்றார்.

இதேபோல் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறாக இன்று பைபாஸ் ரோடு சர்வீஸ் ரோட்டில் செயல்பட உள்ள வார காய்கறி சந்தையை, இடையூறு இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். கமிஷனர் கார்த்திகேயன் நேரில்வந்து ஆய்வு செய்தால் அதன் உண்மை நிலை தெரியவரும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-அக்-202106:24:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "ஒரு வாரம் கெடு" = அதுக்குள்ளே கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொண்டாந்து கொடு, இல்லாட்டி ஒனக்கு வரும் கேடு.. .. அதான் இதுக்கு அர்த்தம்..
Rate this:
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
08-அக்-202111:37:52 IST Report Abuse
navasathishkumar பைபாஸ் ரோடு மட்டுமல்ல கூடல் நகர் பாலம் துவங்கி கூடல் நகர் வரை அதுவும் இரவில் அதிகரித்து வருகின்றது ..இதனால் பாதிப்பு முறையான கட்டிடங்களில் இயங்கும் உரிமையாளர்களுக்கே ...பெரும்பாலும் சிக்கன் இப்ப பீப் சிஸ்ட்டி பைவ் எல்லாம் கிடைக்குது அன்னைக்கு மாட்டு வால் சூப்பாம் அதுக்கும் கூட்டம் இருக்கு ..உணவு பாதுகாப்பு துறை இங்கு எப்படி சான்றிதழ் வழங்கியது என்பது தெரியவில்லை .இனி எப் எஸ் எஸ் ஐ சான்றிதழ் அங்கே ஒட்டப்பட்டிருத்தல் அவசியம் .. ரோட்டில் ஒதுங்க கூட இடம் இல்லை சின்ன ..சின்ன வியாபாரிகள் சைக்கிள் , தள்ளு வண்டிகளில் வெங்காயம் முதல் ஆப்பிள் வரை விற்றால் பொதுமக்கள் விபத்தில் சிக்கவே வழி ஏற்படுத்தும் இவர்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...மதுரை நகரில் பிரபல பள்ளிகளில் வாகனங்களால் பெரும் நெரிசல் காலையிலும் ,மாலையிலும் ஏற்படுகின்றது ..சின்ன சொக்கிகுளம் பிரபல பெண்கள் கல்லூரி ..இடம் இருந்தும் உள்ளே வாகனங்கள் அனுமதிப்பதில்லை ... கஸ்டம்ஸ் காலனி துவங்கி ஆனையூர் ஆனந் நகர் பள்ளிக்கூடம் இங்கு வளைத்து , வளைத்து கட்டிடம் கட்டிய பள்ளி பெற்றோரின் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வில்லை இதனால் நீங்கள் பள்ளி விடும் நேரம் பெரும் கூட்டம் அங்கே திரள்கிறது ..பள்ளிக்கூட பஸ்களும் வர கரணம் தப்பினால் மரணம் அதை விட கொரோனா காலம் அதையும் மாவட்ட மாநகராட்சி கமிஷனர் , மாநகர காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்த வேண்டும் ..தங்களை போன்ற பத்திரிகைகளும் சர்ப்ரைஸ் விசிட் அடித்து செய்தி வெளி இட்டு உதவ வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X