மூடப்பட்ட பள்ளி திறப்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மூடப்பட்ட பள்ளி திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 அக்
2021
23:47

திருத்தணி-மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு பள்ளி, விஜயதசமி நாளான நேற்று மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.



திருவாலங்காடு ஒன்றியம் புதிய பனப்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளியில், 2018ம் கல்வியாண்டில் ஒரே ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் இருந்ததால், மாவட்ட நிர்வாக உத்தரவின்படி பள்ளி மூடப்பட்டது.இதில் படித்த ஒரு மாணவர், பழைய பனப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும், அங்கு பணிபுரிந்த ஆசிரியரையும் வேறு பள்ளிக்கு மாற்றினர்.இந்நிலையில், புதிய பனப்பாக்கம் கிராம மக்கள், மூடப்பட்ட பள்ளியை திறக்க வேண்டும், மாணவர்களை சேர்க்க தயாராக உள்ளோம் என, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் மனு கொடுத்தனர்.மக்கள் கோரிக்கையை ஏற்று, மூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி நேற்று விஜயதசமி நாளில் திறக்கப்பட்டது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார கல்வி அலுவலர் சலபதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மேலும், நடப்பு கல்வியாண்டில் 30 மாணவர்களையும் கிராம மக்கள் நேற்று சேர்த்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மரக் கன்றுகள் நட்டார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X