தணிகாசலம்மன் கோவிலில் விஜயதசமி விழா | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தணிகாசலம்மன் கோவிலில் விஜயதசமி விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 அக்
2021
23:49

திருத்தணி-தணிகாசலம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி, விஜயதசமியையொட்டி, கொய்யா பழங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடந்தது.திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலை, தணிகாசலம்மன் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நவராத்திரி மற்றும் விஜயதசமி என்பதால் மூலவர் அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, கோவில் உட்புறம் முழுதும் கொய்யா பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், மூலவர் அம்மனுக்கு பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.அதே போல், திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், விஜயதசமி மற்றும் நவராத்திரியையொட்டி, பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X