போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2021
23:53

பாமாயில் திருடியவர் கைதுசோழவரம்: சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யோபு, 54. டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 12ம் தேதி, இவருக்கு சொந்தமான டேங்கர் லாரியில், சென்னை மேடவாக்கம் பகுதியில் இருந்து, சோழவரத்திற்கு, பாமாயில் கொண்டு வரப்பட்டது. சோழவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாமாயிலை இறக்குவதற்கு முன், யோபுவிடம் வேலை பார்க்கும் சிவகுமார், 33, என்பவர், 110 கிலோவை திருடியுள்ளார்.இது குறித்து யோபு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்த சிவகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 110 கிலோ பாமாயில் கைப்பற்றப்பட்டது.இருவருக்கு 'காப்பு'மீஞ்சூர்: மீஞ்சூர், காட்டூர் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் பிரவீன்குமார், 28. கடந்த, 13ம் தேதி, இரவு, மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, பணம் கேட்ட பிரவீன் குமார் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்தது. பின், கத்தியை காட்டி மிரட்டியதுடன், பிரவீன்குமாரை தாக்கிவிட்டு, கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து பிரவீன்குமார், மீஞ்சூர் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, மீஞ்சூர் சுமன், 29, அசோக், 29, ஆகிய இருவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.விபத்தில் இளைஞர் பலிநகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த, தொண்டமநாடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணிகாசலம், 35. இவர், நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் கடப்பா நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தொண்டமநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். தொட்டம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X