காரைக்குடி:''நிலக்கரி பிரச்னையில் மத்திய அரசு முன்னுக்குப்பின் முரணாகக் கூறி வருகிறது,'' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே சாக்கோட்டையில் இந்திய கம்யூ., சார்பில் மாநில அளவில் தொண்டர் படை முகாம் நடந்தது.இதில் பங்கேற்ற பின் முத்தரசன் கூறியதாவது: இந்திய கம்யூ., அகில இந்திய மாநாடு அக்.,26 தொடங்கி 2022 அக்டோபர் வரை நடக்கிறது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தமிழக அரசு 100 கோடி ஒதுக்கீடு செய்ததோடு 50 சதவீதம் ஆண்கள் 50 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், போராட்டங்கள் தீவிரமாகும்.சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. ஆனாலும், ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜிவ் கொலைவழக்கில் 7 பேர் விடுதலையை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். சமூக விரோதிகளை கட்சியில் சேர்த்துக் கொண்டு பா.ஜ., தமிழகத்தில் கட்சியை பரப்ப பார்க்கிறது. அது பலிக்காது, என்றார்.