செவ்வாப்பேட்டை-செவ்வாப்பேட்டை அருகே சென்ட்ரிங் வேலைக்கு பயன்படும் இரும்புத் தகடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.செவ்வாப்பேட்டை அடுத்த, புட்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சிலம்பரசன், 30. புட்லுார் பகுதியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 12ம் தேதி மேம்பால பணிகளுக்காக சென்ட்ரிங் போட வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளை, சரக்கு வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் எடுத்துச் சென்றதாக செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இது குறித்து வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், 10 இரும்புத் தகடுகளை திருடியவர்கள் தொழுவூர் குப்பம் இனியன், 29 மற்றும் அவரது நண்பரான திருவூர் ஆஜி என்கிற விஜயன், 22 என்பது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்து, 10 இரும்புத் தகடுகளையும், செவ்வாப்பேட்டை போலீசார் மீட்டனர்.