ஓட்டுப்பதிவு இயந்திரம் உ.பி.,க்கு அனுப்பி வைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரம் உ.பி.,க்கு அனுப்பி வைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
00:26

செங்கல்பட்டு--உத்தர பிரதேச மாநில தேர்தலுக்காக, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்குமாறும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, ஓட்டுப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டுக் கருவி 1,020, வாக்காளர்சரி பாக்கும் காகித கணிக்கை இயந்திரம் - வி.வி. பேட் 1,260 என, மொத்தம் 2,280 இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தது.இதை, உத்தர பிரதேச மாநில வருவாய்த் துறை அதிகாரிகளிடம், செங்கல்பட்டு தேர்தல் பிரிவு தாசில்தார் ராஜேஷ் மற்றும் தேர்தல் அலுவலர்கள், நேற்று முன்தினம், வழங்கினர். அதன் பின், இரண்டு லாரிகள் மூலம், இயந்திரங்களை, எடுத்துச் சென்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X