ஆறு மாதாமாக சம்பளம் இல்லாமல் தவிப்பு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஆறு மாதாமாக சம்பளம் இல்லாமல் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
01:10

சிவகங்கை : ஆறு மாதமாக சம்பளம் இல்லாமல் ரேஷன் கடை பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.



சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் நுகர்பொருள் வாணிபக்கழகம், மகளிர் குழு, பாம்கோ, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மட்டும் 500 க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகின்றன.



இதில் ஒரு சில தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகளில் பணிபுரியும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒரு சில சங்கங்கள் மட்டுமே சம்பளம் வழங்கியுள்ளன. பெரும்பான்மையான தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆறு மாதமாக சம்பளம்வழங்காமல் உள்ளன. 2021 பிப்ரவரியில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.



இன்று வரைசம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையில் பல தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கங்கள் உள்ளன. விஸ்வநாதன், அரசு பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கூறியதாவது:ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க ரேஷன் கடைகளில் அரிசி மூடை ஒன்றுக்கு 50 ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது. ரேஷன் கடைகளில் உள்ள காலி சாக்குகள் ஒன்று 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



இது போன்ற வருமானங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வருகின்றன. இதனை வேறு செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். பல ரேஷன் கடைஊழியர்கள் பல மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.பலர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.----------

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X