கண்மாயில் கலக்கும் சாக்கடை; அச்சத்தில் இந்திரா நகர் மக்கள் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கண்மாயில் கலக்கும் சாக்கடை; அச்சத்தில் இந்திரா நகர் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
01:35

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியிலுள்ள இந்திரா நகரில் பாதாள சாக்கடை நீர் மேன்ேஹாலில்' இருந்து வெளியேறி கண்மாயில் கலக்கிறது. துர்நாற்றத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர்.



இந்நகராட்சி 27 வது வார்டு இந்திரா நகர் கிழக்கு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் நிரம்பி வெளியேறி கழிவு நீர் கீழ்ப்பாத்தி கண்மாயில் கலக்கிறது. கண்மாயில் சாக்கடை கழிவு நீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கண்மாய்க்கு சென்ற சாக்கடை கால்வாயை அடைத்தனர்.பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய மின்மோட்டார் மூலம் கழிவை எடுக்க வேண்டும்.



ஜெனரேட்டர் பழுதால் கழிவு நீரை சுத்திகரிப்பும் செய்ய எடுக்கவில்லை.இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடை மேன்ேஹால்' வழியாக பெருக்கெடுத்து தெருக்களில் ஓடுகின்றன. இந்திரா நகர் மக்கள் சாக்கடை கழிவு நீர் துர்நாற்றத்துடன் கடந்து செல்கின்றனர். அங்கு உருவாகும் கொசுக்கள் மூலம் நோய் பரவும் அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X