பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விஜயதசமியில் 'வித்யாரம்பம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
01:38


திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.



கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நவ.1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு துவங்க அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து நேற்று விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர்கள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு படையெடுத்தனர்.குழந்தைகளின் விரல்களை பிடித்து நெல்மணிகள், அரிசியில் 'அ' என எழுதி கல்வியை துவக்கி வைத்தனர். திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி துவக்கி வைத்தனர்.



முதன்மை முதல்வர் சந்திரசேகரன், மேலாளர் பிரபாகரன் உடனிருந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை செய்தார். பாண்டியன் நகர் ஸ்ரீ காமராஜர் மெட்ரிக் பள்ளியில் செயலர் ராமலிங்கம், பேராசிரியர் அமுதா, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் நரசிங்கசக்தி, பொருளாளர் முருகன், முதல்வர் கார்த்திகா பாரதி, நிர்வாக அலுவலர் அகிலன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஓம்சாந்தி சி.பி.எஸ்.இ., மற்றும் அக்ஷயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர்கள் நர்மதா ஸ்ரீ, வேணுகோபால், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் திலகம் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு கன்னிமார் கோயில் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயராணி, அங்கன்வாடி பணியாளர் சசிகலா, உதவியாளர் மாரிலட்சுமி சந்தன, குங்குமத்துடன் வரவேற்றனர். நிலக்கோட்டை கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை பெற்றோர் உதவியுடன் நெல்மணியில் 'அ' என குழந்தைகளை எழுதச் செய்தனர்.வடமதுரை கலைமகள் மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.பெருமாள், இயக்குனர் அருள்மணி, தலைமையாசிரியர் பாலரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X