கூட்டுறவு சங்கத்தில் லாப தொகை இழுத்தடிப்பு சிவகங்கை போலீசார் குமுறல் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கூட்டுறவு சங்கத்தில் லாப தொகை இழுத்தடிப்பு சிவகங்கை போலீசார் குமுறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
01:44


சிவகங்கை : சிவகங்கை கூட்டுறவு சங்கத்தில் தீபாவளி பண்டிகைக்கான லாபத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாக போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.



சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இதில் உள்ள உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல், மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்தல் என கோடி ரூபாய்க்கும் மேல் வரவு செலவு நடக்கிறது.ஆண்டுதோறும் சங்க லாப கணக்குகளை சரி பார்த்து லாப தொகையை உறுப்பினர்களாக உள்ள போலீசாருக்கு தீபாவளியை முன்னிட்டு வழங்குவது வழக்கம்.



ஆனால் சிவகங்கை போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் இது வரை தீபாவளிக்கான லாப தொகை வழங்கவில்லை என போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால் கிரேடு 2 முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகள் லாப தொகை கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர்.சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது, சங்க உறுப்பினர்களுக்கான லாப தொகை கணக்கிட்டு வைத்துள்ளோம். அக்.,22 முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X