சாணார்பட்டியில் அறிவியல் கண்காட்சி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
சாணார்பட்டியில் அறிவியல் கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
02:24

நத்தம் : -சாணார்பட்டியில் அக்னிச் சிறகுகள் சமூகசேவை மற்றும் இலவச பயிற்சி மையம் மற்றும் டைமண்ட் லயன்ஸ் சங்கம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடந்தது.



சேவை மைய நிறுவனர் முருகானந்தம் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் கதீஷ் குமார் வரவேற்றார்.லயன்ஸ் சங்க தலைவர் பூபோஸ் குரு, முன்னாள் தலைவர் வெங்கடேசலு முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம், மூலிகை செடிகள், மரக்கன்று, இனிப்பு வழங்கப்பட்டது.



அப்துல்கலாம் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அறிவியல் கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, உயிரியல் பூங்கா, உடல் உறுப்பு மண்டலம், கொரோனா வைரஸ், இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். நிர்வாக அறங்காவலர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X