கமிஷன் கேட்டு மிரட்டும் இடைத்தரகர்கள்: இழப்பீடுக்கு தவிக்கும் முன்னாள் ஊழியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
04:36

கோவை;ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் நிறுவன அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கு, கமிஷன் தராததால் இடைத்தரகர்கள் இழப்பீடு தொகையை தர மறுப்பதாக, முன்னாள் தொழிலாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்டுகள் தயாரிப்பின் போது, வெளிப்படும் நுண்துகள்களை சுவாசிப்பதால், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பல நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


போத்தனுார் பகுதியில் 1953 முதல் 1989 வரை செயல்பட்டு வந்த ஒரு ஆஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தை, நிர்வாகத்தினர் விற்று விட்டு லண்டன் சென்று விட்டனர்.நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பலர், ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நிறுவனம் இருந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'டர்னர் அண்டு நிவால்' என்னும் டிரஸ்ட் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.இதற்காக, 2008ம் ஆண்டு, கிருஷ்னெந்து முகர்ஜி என்னும் வழக்கறிஞரை நியமித்தது. அவருக்கு தமிழ் தெரியாததால், ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனியில் பணிபுரிந்த மூவரின் உதவியுடன், தொழிலாளர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்து இழப்பீடு வழங்க முடிவு செய்தனர்.


இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அம்மூவர், 2008 முதல், 2019 ஆண்டு வரை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்களிடம், இரண்டு முதல், 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு இழப்பீடு பெற்று தந்துள்ளனர்.தற்போது, 2016ம் ஆண்டு பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு, இரண்டாவது தவணைக்கான காசோலையும், 2019ம் ஆண்டு பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கான காசோலையும், அவரவர் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. 115 காசோலைகள், இடைத்தரகர்களிடம் இருப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.


இதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.ஒரு சிலரிடம், கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களுக்கான காசோலையை கொடுத்து உள்ளனர். கமிஷன் தர மறுப்போருக்கு, காசோலை தர மறுப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன், 81 என்பவர் கூறுகையில், ''ஆஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, எனக்கு நுரையீரலில் படிமம் ஏற்பட்டு நோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்த நிறுவனத்தினர், மருத்துவ செலவுக்கான தொகையை என் பெயரில் காசோலையாக அனுப்பியுள்ளனர்.


இதனை பெற்று வைத்துள்ள கம்பெனியில் பணிபுரியும் இருவர் மற்றும் முன்னாள் ஊழியரின் மகன் உட்பட மூவர், 10 சதவீதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே காசோலை தருவோம் என மிரட்டுகின்றனர்.வயதானவர் என்றும் பாராமல், தகாத வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு வருகிறார்கள். எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.புகார் குறித்து எதிர் தரப்பினரிடம் கேட்டபோது, '2013ம் ஆண்டு முதல், முன்னாள் தொழிலாளிகளுடன் இணைந்து இழப்பீடு தொகையை பெற்று, ஊழியர்களுக்கு வழங்கி வருகிறோம்.


மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களின் எக்ஸ்ரே மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டை எடுத்துச் சென்று, சென்னையில் மருத்துவரிடம் காண்பித்து வருவோம்.இதற்காக இதுவரை யாரிடமும் பணம் பெற்றதில்லை. இழப்பீடு தொகை வந்தபின் அவரவர் விருப்பப்பட்டு பணம் தருவார்கள். யாரிடமும் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதில்லை.இந்த தவணைக்கான காசோலைகள் இன்னும் வரவில்லை. பணம் வருவதற்கு முன்னரே கமிஷன் கேட்கிறோம் என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. பணம் வாங்காமல்தான் காசோலை வினியோகம் செய்ய போகிறோம்' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X