அருகருகே குழாய் பதிப்பு; அரசுத்துறைகள் உரசலால் பணியில் பாதிப்பு! மருதமலை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
04:37

வீடுகளுக்கு குழாய்களில் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு, குடிநீர் வினியோகக் குழாய்க்கு அருகில் குழாய்களைப் பதிப்பதற்கு, மாநகராட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தாமதமாகி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.கோவை மாவட்டத்தில் குழாய்கள் மூலமாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், கவுண்டம்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.



வடவள்ளி, மருதமலை ரோட்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த பணி நடந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக, பணிகள் நிறுத்தப்பட்டு, இதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் அப்படியே உள்ளன. அதில் பதிக்கப்படவுள்ள குழாயும் பக்கத்திலேயே கிடக்கிறது. இதனால் ரோட்டின் ஒரு புறத்தில் வாகனங்கள் செல்வதில் சிரமமாகவுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.காளிதாஸ் தியேட்டர் பகுதியிலிருந்து பாரதியார் பல்கலை வரையிலும், ரோட்டை அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது.


அதற்கு முன், காஸ் குழாய்களைப் பதிக்க வேண்டுமென்பதற்காகவே, இந்த பணிகள் வேகமாக நடப்பதாகத் தெரிகிறது. ஆனால் மாநகராட்சி சார்பில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகக் குழாய்களுக்கு அருகிலேயே, இந்த குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன.இதனால் குடிநீர் வினியோகக் குழாய்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அவற்றை சரி செய்வதற்குக் குழிகள் தோண்டி, அதில் பணிகளை மேற்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும் என்று மாநகராட்சி தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, இடையர்பாளையம் ரோட்டில் இப்படித்தான், குடிநீர் வினியோகக் குழாய் அருகே மின் வாரியத்தின் புதைமின்வடம் பதிக்கப்பட்டது.மாநகராட்சி எதிர்ப்பு காரணமாக, புதை மின்வடத்தைசற்று தள்ளிபுதைத்தது மின்வாரியம்.


அதேபோன்று, இதையும் இரண்டடி வரை தள்ளிப் பதிக்க வேண்டுமென்று எண்ணெய் நிறுவனத்துக்கு மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.ஆனால் குறுகலாக இருக்கும் அந்த ரோட்டில், காஸ் குழாய்களை வேறிடத்தில் மாற்றிப் புதைக்க முடியுமா என்பது சந்தேகமாகவுள்ளது. இதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே, குழாய் பதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பணியை வேகமாக முடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைத்து, மக்களுக்குப் பாதிப்பின்றி செயல்படுத்த வேண்டியது மாவட்ட கலெக்டரின் கடமை!'குறுகலான ரோடு'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கோவை மேனேஜர் சுரேஷ் கூறுகையில், ''மாநகராட்சி குழாய்க்கு அருகில் இருந்த குழாய்களை மாற்றிக் கொடுத்து விட்டோம். கூடுமானவரை தள்ளியே பதித்து வருகிறோம். மருதமலை ரோடு குறுகலாக இருப்பதால், பகலில் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை;இரவில்தான் பணி நடக்கிறது. மழை வருவதால் பணிகளைத் தொடர முடியவில்லை. இம்மாத இறுதிக்குள், குழாய் பதிக்கும் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X