'டிரான்ஸ்பார்மர் செலவு வசூலிக்க கூடாது': விவசாயிகள் மகிழ்ச்சி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'டிரான்ஸ்பார்மர் செலவு வசூலிக்க கூடாது': விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
04:48

பொங்கலுார்;புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்து அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டிய தேவை உள்ளது.புதிதாக மின் இணைப்பு பெரும் விவசாயிகளிடம் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவை ஏற்க வேண்டும். அப்போதுதான் மின்னிணைப்பு தருவோம் என்று இதுவரை மின்வாரிய அலுவலர்கள் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
ட்ரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவு அதிகம் என்பதால் விவசாயிகளால் அத்தொகையை செலுத்துவது இயலாத காரியம். எனவே, பல விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், சமீபத்தில் மின் குறை தீர்ப்பாயம் மின் நுகர்வோரிடம் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான செலவை வசூலிக்கக் கூடாது. வசூலித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், புதிய மின் இணைப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X