திருப்பூர்:தொழில், வேலை, கல்வி, மருத்துவம், வியாபாரம், வர்த்தகம் என பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை பல லட்சமாக உள்ளது. இதனால், நகரின் பெரும்பாலான ரோடுகள், காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் என பரபரப்பாகவே காட்சியளிக்கும்.நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நேற்று விஜயதசமியும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இரு நாள் நகரின் கடைவீதிகளில் பூஜை பொருள் விற்பனையும், அதை வாங்க வந்த மக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நேற்று முன்தினம் பூஜை வழிபாடுகளுக்குச் சென்று வந்தோர் என ரோட்டில் குறைந்த அளவில் கூட்டம் இருந்தது.இரண்டு நாள் பூஜைக்கான விடுமுறை. இன்றும் நாளையும் வழக்கமான வார விடுமுறை நாட்கள் என்ற நிலையில், அரசு மற்றும் பெரும்பாலான தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை. இந்த தொடர் விடுமுறை காரணமாக நேற்று நகரில் வழக்கமான மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லை.