திருக்கோவிலுார் : முகையூர் அடுத்த ஆற்காடு கிராமத்தில் குறைந்தழுத்த மின் வினியோகத்தை சீரமைக்கும் வகையில், தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 22 கே.வி., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.இதற்கான மின் வினியோக துவக்க நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர் மரியராஜ் ஆகியோர் டிரான்ஸ்பார்மரை இயக்கி மின் விநியோகத்தை துவக்கி வைத்தனர். இதன் மூலம் அப்பகுதியில் சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.