ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகத்தில் தலவிருட்ச மரக்கன்றினை எம்.எல்.ஏ., நட்டு வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுமாறு அறநிலையத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மா, புன்னை, வில்வம், செண்பகம், மருதம் உள்ளிட்ட பல்வேறு வகையான தல விருட்ச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., புன்னை தல விருட்ச மரக்கன்றினை நட்டு வைத்தார். கோவில் எழுத்தர் விமல் உட்பட பலர் உடனிருந்தனர்.