விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எஸ்.பி., முகாம் அலுவலகம் எதிரில் உள்ள சாலை குண்டும், குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயிலில் இருந்து பின்புற கேட்டிற்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், டி.ஆர்.ஓ., முகாம் அலுவலகம் வரை இருவழிச்சாலையாகவும், எஸ்.பி., முகாம் அலுவலகத்திலிருந்து பின்புற கேட் வரை ஒரு வழி சாலையாகவும் உள்ளது.
இந்நிலையில், எஸ்.பி., முகாம் அலுவலகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு அலுவலகம் எதிரே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், இருவழிச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.