ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு போட்டி கிராம வார்டு உறுப்பினர்களுக்கு 'ஜாக்பாட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:17

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பதவியைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுவதால், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 'ஜாக்பாட்' அடித்துள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும், 3,163 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 60 ஊராட்சித் தலைவர், 180 ஒன்றிய கவுன்சிலர், 19 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 3,773 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்து, வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வரும் 20ம் தேதி அந்தந்த ஊராட்சியில் பதவி ஏற்க உள்ளனர்.



இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்களில் ஒருவர், ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பேற்கலாம். இதற்கான ஓட்டெடுப்பு மறைமுகமாக நடைபெறும்.இந்த ஓட்டெடுப்பில், அதிக எண்ணிக்கையிலான வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக ஒரு ஊராட்சியில், 7 வார்டு உறுப்பினர்கள் இருந்தால், அதில் 4 வார்டு உறுப்பினர்கள் ஆதரிக்கும் நபர் வெற்றி பெற்று, ஊராட்சி துணைத்தலைவராக பதவி ஏற்பார்.



இந்த ஊராட்சி துணைத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதால், மறைமுக தேர்தலில் ஆதரவளிக்க கோரி சக வார்டு உறுப்பினர்களை கவனித்து வருகின்றனர்.



ஒரு சில ஊராட்சிகளில் புல்லட், நகை, பணம் என போட்டி போட்டு வார்டு உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை தாராளமாக வழங்குகின்றனர்.ஒரு சிலர், தனக்கு ஆதரவான வார்டு உறுப்பினர்களை எதிர்பக்கம் செல்லாமல் இருக்க வெளி மாவட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஊராட்சித் தலைவரை விட துணைத்தலைவர் பதவிக்கு அதிக செலவு செய்து வருகின் றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X