தேர்தலில் அண்ணி தோல்வி; அதிக மது குடித்து கொழுந்தன் சாவு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தேர்தலில் அண்ணி தோல்வி; அதிக மது குடித்து கொழுந்தன் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:24

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் அண்ணி தோல்வி அடைந்த விரக்தியில் அதிகமாக மது குடித்த கூலித் தொழிலாளி இறந்தார்.



கண்டமங்கலம் அடுத்த கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி குப்பம்மாள் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதனால், விரக்தியில் இருந்த பாலுவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி, 50; கடந்த 12ம் தேதி முதல் அளவுக்கு அதிகமாக குடித்து வந்துள்ளார்.



நேற்று முன்தினம் காலை புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள மதுக்கடையில் அளவுக்கு அதிகமாக குடித்தவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு சிவமணி என்ற மனைவியும், பிரபாகரன், சிந்தனைச்செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X