குன்றத்தில் அம்பு எய்தல் விழா | மதுரை செய்திகள் | Dinamalar
குன்றத்தில் அம்பு எய்தல் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:26

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோயில் நவராத்திரி விழாவில் உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளுவார்.



சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு, அங்குள்ள வன்னி மரத்தடியில், வில், அம்பு வைத்து, அபிஷேகங்கள், விக்னேஷ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குகளிலும் பலி பூஜை முடிந்து, சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில், அம்பு வழங்கப்படும்.அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்வார். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தடை காரணமாக கோயிலுக்குள் சுவாமி, தெய்வானை படிச்சட்டத்தில் எழுந்தருளி சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு திருவாட்சி மண்டபத்தை சுவாமி மூன்றுமுறை வலம் சென்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X