நீலமங்கலம் கோவிலில் விஜயதசமி சிறப்பு பூஜை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
நீலமங்கலம் கோவிலில் விஜயதசமி சிறப்பு பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:30

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் விஜயதசமி சிறப்பு பூஜைநடந்தது.



இதனையொட்டி, காலையில் பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து விஜயதசமி பூஜை நடத்தப்பட்டது. பெண்கள் பங்கேற்று 108 எலுமிச்சை பழம் விளக்கேற்றி சுமங்கலி தாம்பூலம் கொடுத்தனர்.சிறப்பு பூஜைகள் குறித்து பெண் பக்தர் மலையம்மாள் பக்தர்களுக்கு விளக்கினார். பூஜைக்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X