பைபாசில் அரசு பஸ்கள் இயக்க வேண்டுமென எதிர்பார்ப்பு! கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:36

பரங்கிப்பேட்டை : சிதம்பரத்தில் இருந்து பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாகவும் கடலுாருக்கு, அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், அரசு கல்லுாரி மாணவர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உலக வங்கி நிதி உதவியுடன், வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டு சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பு.முட்லுார் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை வழியாக சிதம்பரத்தில் இருந்து, பரங்கிப்பேட்டைக்கு ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. ஆனால், அதிகளவில் பஸ்கள் இயக்காததால், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.



சி.முட்லுாரில், அரசு கலைக் கல்லுாரி, மோட்டார் வாகன அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில், புதுச்சத்திரம், புவனகிரி, கடலுார், பரங்கிப்பேட்டை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏழை, மாணவர்கள் படிக்கின்றனர். சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லுாரிக்கு வரும் மாணவர்களுக்கு, நேரடியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து கிள்ளை, முடசல் ஓடை, பிச்சாவரம் செல்லும் பஸ்களில் ஏறி வந்து சி.முட்லுாரில் இறங்கி கல்லுாரிக்கு நடந்தே வந்துவிடுகின்றனர்.ஆனால் கடலுார், புவனகிரி, பரங்கிப்பேட்டை மார்க்கத்தில் இருந்து கல்லுாரிக்கு வரும் மாணவர்களுக்கு, பஸ் வசதி இல்லாததால், பு.முட்லுார் வரை பஸ்சில் வந்து, 2 கி.மீ., துாரம் கல்லுாரிக்கு நடந்தே செல்கின்றனர்.



காலவிரையம் ஏற்படுவதால், குறித்த நேரத்திற்குள் கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை. மழைக் காலங்களில், மாணவர்கள் 2 கி.மீ., துாரம் மழையில் நனைந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், சி.முட்லுாரில் தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறந்துள்ளதால், வழக்கு சம்மந்தமாக கோர்ட்டிற்கு செல்பவர்கள் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவரும் பஸ் வசதியின்றி பாதிக்கின்றனர்.



சிதம்பரத்தில் இருந்து கடலுாருக்கு பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக அதிக அரசு பஸ்கள் இயக்கினால் பயணிகள், மாணவர்கள், கோர்ட்டிற்கு செல்வோர் பயன்பெறுவர். மேலும் பஸ்கள் இயக்காததால், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் காட்சி பொருளாக உள்ளது.எனவே, பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் நலன்கருதி, கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு, பு.முட்லுார் பைபாஸ் வழியாக அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X