டீக்கடைகளில் திருடிய முதியவர் கைது | செய்திகள் | Dinamalar
டீக்கடைகளில் திருடிய முதியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
05:49

காரைக்கால் : காரைக்காலில் இரண்டு டீக்கடைகளின் பூட்டை உடைத்து 1.25 லட்சம் பணம், நகை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.



காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சேத்துார் பகுதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு டீக்கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ஆயுத பூஜையை முடித்து, கடைகளை பூட்டிவிட்டு, இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.நேற்று காலை இருவரும் வந்து பார்த்தபோது, டீக்கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு கடைகளிலும் 1.25 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.



இது குறித்த புகார்களின் பேரில், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் லெனில்பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். நேற்று அதிகாலை போலீசார் ரோந்து சென்றபோது, தென்னங்குடி பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், திருச்செந்துார், கொத்தங்குடியை சேர்ந்த தங்கமுத்து, 70, என்பதும், டீக்கடைகளில் திருடியதும் தெரிய வந்தது. இவர் மீது தமிழகம், புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளது. தங்கமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 75 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X