புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு உடனடி சேர்க்கை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் ஐ.டி.ஐ., முதல்வர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நெட்டப்பாக்கத்தில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான உடனடி சேர்க்கை நடக்கிறது.தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரிஷியன், கம்ப்யூட்டர் இயக்குபவர், தையல் தொழில்நுட்பம் போன்ற பயிற்சி பிரிவுகளுக்கான உடனடி சேர்க்கை நடந்து வருகிறது. விருப்பம் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக கல்வி பயின்ற கல்வி நிலையத்திலிருந்து பெற்ற மாற்றுச்சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன், நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அணுகவும்.மாணவர்கள் வரும் தேதியில் காலியிடங்கள் உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டும் சேர்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்படும். வரும் 30ம் தேதி சேர்க்கைக்கான இறுதி நாள்.