சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்காட்டில் ஒரு மாதமாக தொடர்மழை பெய்கிறது. கடந்த, 11ல் பெய்த கனமழையால், 2 - 3வது கொண்டை ஊசி வளைவு இடையே, 25 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலத்துக்கு மண்சரிவு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணி, கடந்த, 14ல் நிறைவுபெற்றது. பழுதான சாலை பகுதியில், 75 மீட்டர் தூரத்துக்கு, ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், கனரக வாகனங்கள் தவிர்த்து, இதர வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட, 30 கி.மீ., வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும். குப்பனூர் வழியாக, கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.