கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: மீண்டும் தென்பெண்ணையில் தேங்கிய ரசாயன நுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
10:25

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரசாயன நுரை தேங்கியது.


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் காலை, 947 கன அடி நீர்வரத்து இருந்தது. தென்பெண்ணை ஆற்றில், 740 கன அடி நீரும், வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என மொத்தம், 828 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக, 500 அடிக்கு மேல் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்படும் போது, ரசாயன நுரை ஏற்பட்டு தேங்கி நிற்கும். ஆனால், நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக ஆற்றில் நுரை தென்படவில்லை. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 908 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நீரை காட்டிலும் நேற்று அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது, தென்பெண்ணை ஆற்றில் மட்டும், 820 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 908 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், மீண்டும் அதிகளவு ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X