பக்தி பரவசம் பொங்க பெருமாளை வழிபட்ட பக்தர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
23:21

திருப்பூர்:நான்கு வாரங்களாக தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பெருமாள் பக்தர்கள், ஐந்தாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாளையும், தாயார்களையும் ஆனந்தக்கண்ணீர் வழிய, பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர்.


கொரோனா ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு தலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் மூடப்பட்டன. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு, கோவில்களில் நடை சாத்தப்பட்டது; பக்தர் தரிசனம் அனுமதிக்கப்படவில்லை.புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கும், பெருமாள் பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்ய முடியாமலும், விரதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வந்தனர். முக்கியமான கோவில்கள் மூடப்பட்டதால், கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களை தேடிச்சென்று வழிபட்டனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று, தரிசன அனுமதி கிடைத்ததால், பக்தர்கள் ஆனந்தமாக சென்று பெருமாளை வழிபட்டனர்.திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், காலை முதல், பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, வழிபட்டனர். கோவிலில், உற்சவருக்கு சிறப்பு பூஜை எதுவும் நடக்கவில்லை. வழக்கமான படிபூஜைகள் முடிந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.சமூக இடைவெளியுடன் சென்ற பக்தர்கள், ஆஞ்சநேயர், கனகவல்லி தாயார், பூமிநீளா தேவி மற்றும் வீரராகவப்பெருமாளை கண் குளிர தரிசனம் செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, கோவிலில் வழிபட்டதால், பக்தர்கள் கண்ணீர் மல்க இறைவனை பிரார்த்தனை செய்தனர்.அவிநாசி அருகே தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஷபெருமாள், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜபெருமாள், அனுப்பர்பாளையம் அரங்கநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில்.அக்ரஹாரப்புத்துார் - வேட்டுவபாளையம் காரணப்பெருமாள், மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில், குளத்துக்கடை வேணுகோபாலசாமி, வரதராஜபெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணப்பெருமாள் கோவில்.
கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில், ஐந்தாவது புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, பக்தர்கள் பெருமாளை வழிபட்டு, துளசி தீர்த்தம் பருகி, விரதத்தை பூர்த்தி செய்தனர்.பெருமாள் மலைசிவன்மலை அருகேயுள்ள பெருமாள் மலையில் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடரமணர் சாமி கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தினர்.காங்கயம், சிவன்மலை, திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். இதனால், மகா மண்டபத்தினுள் இருபுறமும் நின்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கும்பாபிஷேகம் நடந்து, 35 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவிலை சுற்றிலும் தண்ணீர் கசிந்து ஓடுகிறது.பழுதடைந்த வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி செய்ய கருத்துரு தயாரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, திருப்பணி செய்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X