புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:07

நத்தம்---திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை நாளான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கொரோனா காரணமாக வார வெள்ளி முதல் ஞாயிறு வரை கோயில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இத்தடையை நீக்கி அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து புரட்டாசி கடைசி சனிக்கிழமை நாளான நேற்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபாலசுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.சாணார்பட்டி வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சுவாமிக்கு தாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசி என வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடைபெற்றது. தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் விஜயன் சார்பில், சக்கரை பொங்கல், தயிர் சாதம்,தக்காளி சாதம் மற்றும் புளி சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன் மற்றும் கண்ணன் செய்திருந்தனர்.ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரங்கநாதர் பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக சென்றார். கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.கொடைக்கானல்: மலைப்பகுதியில் கொடைக்கானல் வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு ராமர், வெங்கடாஜலபதி கோயில், தாண்டிக்குடி சவுமியநாராயணப் பெருமாள், பூலத்தூர் ராமர் கோயில், கே.சி.பட்டி மலைப் பகுதிகளில் புரட்டாசி கடைசி வாரத்தை அனுசரிக்கும் விழாக்கள் நடந்தன.சின்னாளபட்டி: சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயிலில் அன்னதானம் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மரகதகண்டி, நவரத்தினமாலை, நீலமேக பதக்கம், பவளமலை, தங்கத்திருவடியுடன் பஞ்ச முக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிவார விசேஷ பூஜைகள் நடந்தது.

மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தமல்லி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில், புரட்டாசி சனி வார சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X