இயற்கை விவசாய வட்டார குழுக்கள் அமைப்பு | தேனி செய்திகள் | Dinamalar
இயற்கை விவசாய வட்டார குழுக்கள் அமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:17

கம்பம்--ஒவ்வொரு வட்டாரத்திலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் குழுக்களை ஏற்படுத்த தோட்டக்கலைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.உரம், பூச்சி மருந்துகளை விவசாயத்தில் பயன்படுத்தி வருவதால், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை உள்ளடக்கிய குழுக்கள் ஏற்படுத்தப்படுகிறது. இந்த விவசாயிகளை ஊக்குவிக்க எக்டேருக்கு ரூ. 3750 ஊக்கத் தொகை,இயற்கை விவசாயம் செய்பவர் சான்றிதழ் பெற்றுத்தரப்படும். உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இக் குழுவில் இணைபவர்கள் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்களுக்கு நல்லவிலை கிடைக்கும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X