'சரக்கு'க்கு பணமின்றி கொலை; தலைமறைவு ஆசாமி கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'சரக்கு'க்கு பணமின்றி கொலை; தலைமறைவு ஆசாமி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:20

பல்லடம்:பல்லடத்தில், சரக்கு வாங்க பணம் இன்றி திருட சென்றபோது தொழிலாளி கொலை செய்யப்பட்டதில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த, 3ம் தேதி இரவு, பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மரக்கடை ஒன்றில் நடந்த திருட்டு முயற்சியை தடுக்க முயன்ற, வடுகபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரை, திருடர்கள் கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், சிவகங்கையை சேர்ந்த அழகர்சாமி, 22 என்பவரை கைது செய்தனர். நேற்று முன்தினம், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார்.போலீசார் கூறுகையில், 'ரஞ்சித்துக்கு, நிரந்தர வேலை எதுவும் கிடையாது. குடித்துவிட்டு இதுபோல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல், பல்லடம் வந்த இவர், சரக்கு வாங்க பணம் இல்லாததால் அழகர்சாமியுடன் சேர்ந்து திருட முயன்றார்.இருவரையும் பிடிக்க முயன்றபோது, ரஞ்சித், சுப்பிரமணியை கத்தியால் குத்தியதில் அவர் இறந்துள்ளார். கொலையில், தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X