சென்னை அணி வெற்றிக்கு ஆழ்கடலில் பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
03:02

சென்னை : கிரிக்கெட்டில், சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, சென்னை, நீலாங்கரையில் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, மீன்வளத்தை பாதுகாக்க கடலுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அற்றியது,



75வது சுதந்திர தின கொடியை பறக்கவிட்டது என, ஆழ்கடலில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.நேற்று முன்தினம், ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணி சாம்பியன்பட்டம் வென்றதை சிறப்பிக்கும் விதமாக, ஆழ்கடலில், வாழ்த்து தெரிவிக்க அரவிந்த் முடிவு செய்தார்.நேற்று, நீலாங்கரை, புளூபீச் சாலை கடற்கரையில் இருந்து, 3 கி.மீ., கடலில் படகில் சென்றனர். இவருடன், ஜிஸ்ணு, 12, திரு, 22, கணேஷ், 25, ஆகியோர் பயணித்தனர்.அனைவரும் சுவாச உபகரணங்கள் அணிந்து, 35 அடி கடல் ஆழத்தில் மணல் பரப்புக்கு சென்றனர். அங்கு, கிரிக்கெட் விளையாடுவது போல் செய்கை செய்து, சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



மொத்தம், 20 நிமிடம் அங்கு இருந்தனர். கடல் நீரில், பந்து பறக்காது என்பதால், அருகில் இருந்து வீசி, பேட்டால் அடித்து விளையாடினர்.இது குறித்து, அரவிந்த் கூறியதாவது: நான், 16 ஆண்டுகளாக ஆழ்கடல் பயிற்சி அளித்து வருகிறேன். ஆழ்கடலில், உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது, குப்பை அகற்றுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, கடல் வளத்தை பாதுகாக்க நடத்துகிறேன். ஒவ்வொரு முறையும், கடலோர பாதுகாப்பு துறை அனுமதி பெற்று தான், ஆழ்கடல் செல்வேன். கிரிக்கெட்டில், சென்னை அணி வெற்றி பெற்றதை பாராட்டும் விதமாக, இந்நிகழ்ச்சி நடத்தினேன். சிறுவன் ஜிஸ்ணு கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவருக்கு, இந்த சாகசம் பெரும் ஊக்குவிப்பை கொடுத்தது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-202111:36:13 IST Report Abuse
அப்புசாமி அடேய்.. பாவம்டா... கடல்ல மீனெல்லாம் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்டா... ஏற்கனவே காடுகளை அழிச்சு காட்டு விலங்குகளை துவம்சம் பண்ணிட்டீங்க. போங்கடா, போய் உங்க வீட்டுக்குள்ள தண்ணி ரொப்பி விளையாடி கெத்து காட்டுங்கடா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X