ஆக்கிரமிப்பில் ஓடை மழைநீர் செல்ல சிரமம் | தேனி செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பில் ஓடை மழைநீர் செல்ல சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
03:46

போடி- -போடி மீனாட்சியம்மன் கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போடி குரங்கணி பகுதியில் பெய்யும் மழைநீர் கொட்டகுடி ஆறு வழியாக பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய்களுக்கு சென்றது. 100 ஏக்கரிலான மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் தேங்குவதால் விசுவாசபுரம், அம்மாபட்டி, பத்ரகாளிபுரம், மீனாட்சிபுரம் பகுதி கிணறுகளில் நீர் மட்டம் உயரும். 450 ஏக்கர் பாசன வசதி பயன் பெறும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. மீனாட்சியம்மன் கண்மாய் ஓடையின் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதால், கழிவுநீர் சீராகசெல்ல முடியாமல் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீரை தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X